ஜோக்ஸ் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 14 December 2015

ஜோக்ஸ்



மகளிரணித் தலைவி ஏன் டயட்ல இருக்காங்க..?’’
‘‘தலைவர், அவங்களை நமீதா மாதிரி இளைக்கச் சொல்லிட்டாராம்...
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

“காலணி ஆதிக்கத்தை ஒழிப்போம்னு எதிர்க்கட்சிக்காரன் கோஷம் போடறானே... ஏன்?’’
‘‘நீங்க பேசற மேடைல நிறைய செருப்பு விழுறதைப் பாத்து அவனுக்கு பொறாமை தலைவரே..!’’
- சி.சாமிநாதன், கோவை.

தலைவர் செம மப்புல இருக்கார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘ரெய்டுக்கு வந்தவர்களிடம் கூட்டணி பேரம் பேசிக்கிட்டிருக்காரே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

நம்ம தலைவருக்கு பாவம் இப்ப டைமே சரியில்லை...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ராத்திரி தூக்கத்துல பத்து மணிக்கு மேல பேசினதுக்கு போய் கேஸ் போட்டுட்டாங்க!
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

ஸ்பீக்கரு...

‘‘எங்கள் தலைவர் பேசுவதை ஒளிபரப்பும்போது, ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் தீங்கானது’ என்று ஸ்க்ரோல் போடும் தொலைக்காட்சிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்போம்...’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

போலீஸ் ஸ்டேஷன்ல என்ன ஒரே கூட்டம்..?’’
‘‘ஏட்டய்யா தலைமையில ‘திருடர்கள் குறை தீர்க்கும் நாள்’ நடந்துட்டு இருக்கு...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘2016ல் நமது ஆட்சி என்று கூறி மக்களையும், ‘நல்ல ஆட்சி’ என்று கூறி நமது கட்சிக்காரர்களையும் பயமுறுத்தும் தலைவர் அவர்களே...’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages