விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது நான்கு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் முதல் கதாநாயகியாக தமன்னா, இரண்டாவதாக ‘மேகா’ படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கேவை தேர்வு செய்திருந்தனர்.
அடுத்தபடியாக மூன்றாவது கதாநாயகியை தேடிவந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷும், நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா நாயரும் தேர்வு செய்திருக்கிறார்கள். மொத்தம் நான்கு ஹீரோயின்களை கொண்டு ‘தர்மதுரை’ உருவாகவுள்ளது.
இப்படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இப்படம் மூலம் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.
No comments:
Post a Comment